IND vs SA | 1st T20 | ‘ரோஹிட் தலைமையில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்துமா இந்தியா?’
South Africa Tour Of India First T20 Starts Today
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் துவங்க இருக்கிறது.
இன்று திருவனந்தபுரத்தில் நடக்க இருக்கும் முதல் டி20 போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான இந்திய அணி, டெம்பா பாவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கீரின் பீல்டு மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.
“ ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை வென்றதன் மூலம், இந்த தொடரையும் வென்று டி20 உலக கோப்பைக்கு ஒரு புத்துணர்வுடன் செல்லுமா இந்தியா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “