IND vs SA | 2nd T20 | ’16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா’
IND VS SA 2nd T20 India Won By 16 Runs
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.
முதலில் ஆடிய இந்திய அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக அதிரடி காட்டி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 237 ரன்கள் எடுத்தனர். அதற்கு பின் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியும் தன் பங்குக்கு அதிரடி காட்டி இந்திய அணியின் பவுலர்களை துவம்சம் செய்தனர். இறுதியாக 16 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோல்வியை தழுவியது.
“ இந்திய அணியின் சூர்ய குமார் யாதவ் 61(22), தென் ஆப்பிரிக்க அணியின் மில்லர் 106(47) இருவரின் அதிரடியில் களம் சற்றே அதிர்ந்து போனது “