IND vs SA | 3rd ODI | ‘7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்தியா’
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது இந்திய அணி.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் அபார பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 99 ரன்களுக்குள் பத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே பறிகொடுத்து எளிதாக வென்று 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
“ கிட்ட தட்ட 11-12 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி, இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்காவை ஷிகர் தவான் தலைமையில் வீழ்த்தி தொடரை கைப்பற்றி இருக்கிறது “