IND VS SA | First T20 | ‘7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா’
இந்தியாவிற்கான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவை வீழ்த்தி இருக்கிறது.
முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 211 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி மில்லர் 64(31) மற்றும் வான்டர் டஸ்சனின் 75(46) அதிரடியால் 19.1 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
“ 211 ரன்கள் என்பது நல்ல இலக்கு தான். ஹர்திக் பாண்டியாவிற்கு ஒரு ஓவர் மட்டும் கொடுத்தது, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல் கடைசி கட்டங்களில் 20 ரன்களுக்கும் மேலான ரன்கள் கொடுத்ததும், இந்திய அணியின் வெற்றியை பறித்தது “