IND vs SL | 2nd T20 | ‘வீணானது அக்ஸர் படேலின் அதிரடி’
IND VS SL 2nd T20 Srilanka Won By 16 Runs
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.
முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 206 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியினர் சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்த போதும் கூட சூர்ய குமார் யாதவ் 51(36), அக்ஸர் படேல் 65(31) சிறப்பாக விளையாடி வெற்றியின் விளிம்பு வரை ஆட்டத்தை எடுத்து சென்றனர். இறுதியாக 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.
“ இந்திய அணியின் துவக்கமும் சரி மிடில் ஆர்டரும் சரி பவுலிங்கும் சரி எல்லாமே செம்ம வீக்காக இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு உலககோப்பை செல்வோமேயானால் செம்ம அடி வாங்கிவிட்டு வெளியில் வருவோம் “