IND vs WI | 2nd T20 | ‘இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி’
WI VS IND 2nd T20 WI Won By 5 Wickets
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெண்ரு இருக்கிறது மேற்கிந்திய தீவுகள் அணி.
முதலில் ஆடிய இந்திய அணி அதிரடியான பேட்டிங் வரிசை இருந்த போதும் கூட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் ஓபேத் மெக்காய் நான்கு ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
“ நான்கு ஓவர்கள் வீசி ஒரு மெயிடன் உட்பட ஆறு விக்கெட்டுக்கள் கைப்பற்றிய ஓபேத் மெக்காய் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “