IND W v BAN W | ODI Series | ‘நீ என் கப்ப வாங்க வர, அம்பயர வர சொல்லு!’ – ஹர்மன் ப்ரீத்
இந்திய மகளிர் மற்றும் வங்கதேச மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி தொடரிடையே ஹர்மன் ப்ரீத் பேசியது கண்டத்துக்கு உள்ளாகி வருகிறது.
இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் மோதிய ஒரு நாள் போட்டி தொடர் டிராவில் முடிந்த நிலையில் கப்பை ஷேர் செய்து கொள்ளும்படி முடுவெடுக்கப்பட்டது. தொடர் முழுக்க அம்பயரிங் மோசமாக இருந்ததால் கடுப்பான ஹர்மன் ப்ரீத், வங்கதேச அணி கேப்டனிடம் ‘நீயா கப் அடிச்ச, அம்பயர வர சொல்லு அவர் கூட நாங்க போட்டோ எடுத்துக்கிறோம்’ என்று பொதுவெளியில் கூறியது கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.
அம்பயரிங் எப்படி இருக்கிறதோ இருந்துவிட்டு போகட்டும். இந்திய மகளிர் அணியின் ஆட்டமும் கூட ஒட்டு மொத்தமாக தொடரில் மோசமாகவே இருந்தது. ஒரு வீக்கான அணியிடமே போராடி போராடி ஜெயித்துக் கொண்டு இருந்தால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளை எல்லாம் எப்படி இந்தியா எதிர்கொள்ளும் என கிரிக்கெட் வல்லுநர்கள் இந்திய மகளிர் அணியையும், ஹர்மன் ப்ரீத் கவுரையும் கடுமையாக சாடி வருகின்றனர்.
“ பொதுவெளியில் மோசமான வார்த்தைகளை உபயோகித்த ஹர்மன் ப்ரீத் கவுருக்கு சம்பளத்தில் 75 சதவிகித அபராதமும், 3 நல்லொழுக்க புள்ளிகளை குறைத்தும் நடவடிக்கை எடுத்து இருக்கிறது ஐசிசி “