அணி சமநிலையாக இல்லை, முதலில் அணியை பிரித்து சீரிஸ் விளையாடுவதை நிறுத்த வேண்டும்!
ஆசிய கோப்பையின் சூப்பர் 4 பிரிவில் ஜெயித்தே ஆக வேண்டிய போட்டியில் இலங்கையிடம் தோற்று ஆல்மோஸ்ட் ஆசிய கோப்பைக்கான ரேஸ்சில் இருந்து வெளியேறி இருக்கிறது இந்தியா.
அணியை பிரித்து எல்லா நாடுகளுக்கும் அனுப்பிவிட்டு அணியின் சமநிலையையே உருக்குலைத்து இருக்கிறது பிசிசிஐ. தோனி தலைமையில் ஒரு அணியானது அப்படியே மாறாமல் நான்கைந்து சீரிஸ்கள் ஆடும். அப்படி சமநிலை நீடித்தால் மட்டுமே வலுவான அணி உருவாகும். இந்த சமநிலையை வைத்துக்கொண்டு வெண்கல கிண்ணம் அடிப்பது கூட கடினம் தான்.
ஒரு பக்கம் ரோஹிட் அவர்களின் கேப்டன்சிப், பேட்டிங் அபாரம் தான் என்றாலும், ஒரு டீமாக இந்திய அணி திறம்பட செயல்படவில்லை. அதற்கு முழுக்க முழுக்க காரணம் இந்திய அணியின் சமநிலையை நீட்டிக்க தவறிய பிசிசிஐ தான். ஒரே நேரத்தில் அணியை இரண்டு பங்காக பிரித்து வெவ்வேறு சீரிஸ்களை ஆட வைத்ததிலேயே வீரர்களுக்கு இடையேயான கம்முயூனிகேசன் என்பது சுக்கு நூறாகிப்போனது. அப்புறம் எப்படி அணியில் சமநிலைப்போக்கு இருக்கும்.
” மோசமான பீல்டிங், மோசமான கீப்பிங் என்று நிறைய சொதப்பல்கள் அணியில் தொடர்ந்து நீடிக்கிறது. இவ்வாறே சென்றால் உலககோப்பையை பார்க்க மாத்திரமே முடியும் “