பங்களாதேஷ்க்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சனை இணைக்காதது ஏன்?
Why Sanju Samson Not In The List Against Bangladesh Squad
பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சனை இணைக்காததால் நெட்டிசன்கள் பிசிசிஐ-யை வறுத்தெடுத்து வருகின்றனர்.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஸ்குவாடில் இருந்தும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தற்போது பங்களாதேஷ் தொடரிலும் சஞ்சு சாம்சன் இணைக்கபடவில்லை. அணியில் பெரிதாய் ஜொலிக்காத வீரர்களுக்கு எல்லாம் அடுத்தடுத்து வாய்ப்பளிக்கு போது சஞ்சுவிற்கு மட்டும் ஏன் இடமில்லை என ரசிகர்கள் பிசிசிஐ-யை வறுத்தெடுத்து வருகின்றனர்.
“ டி20 உலக கோப்பையிலும் சரி, நியூசிலாந்து தொடரிலும் சரி பெரிதாய் ஜொலிக்காத ரிஷப் பண்ட் கூட பங்களா தேஷ் தொடரில் இருக்கும் போது சஞ்சுவிற்கு ஏன் இடமில்லை என்று ரசிகர்கள் கேட்கும் கேள்வி என்னவோ நிச்சயம் சரி தான் “