கொல்கத்தாவில் நடக்கவிருக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான கடைசி டி20 போட்டி!
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற இருக்கிறது.
மூன்று டி20 போட்டிகள் கொண்ட நியூசிலாந்து-இந்தியா தொடரில் ஏற்கனவே இந்தியா இரண்டில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கும் நிலையில் இன்று மூன்றாவது டி20 நடைபெற இருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.
நேரம் ஆக ஆக பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இரண்டாவதாக பேட்டிங் செய்பவர்களுக்கு ஆடுகளம் ஒத்துழைப்பு கொடுக்கும். ஆதலால் டாஸ் வெல்பவர்களே கிட்ட தட்ட போட்டியின் வெற்றியாளர்கள். என்ன தான் டாஸ் முன்னிலை வகித்தாலும் திறமையை முன்னிருத்தி விளையாண்டால் எதையும் வெல்லலாம் ஆகவே பொறுத்திருந்து பார்க்கலாம்.
India Probable XI: Rohit Sharma, KL Rahul/Ruturaj Gaikwad, Shreyas Iyer, Suryakumar Yadav, Rishabh Pant/Ishan Kishan, Venkatesh Iyer, Axar Patel, R Ashwin, Harshal Patel, Deepak Chahar, Bhuvneshwar Kumar/Avesh Khan
New Zealand Probable XI: Martin Guptill, Daryl Mitchell, Mark Chapman, Glenn Phillips, Tim Seifert, Jimmy Neesham, Mitchell Santner, Tim Southee, Ish Sodhi, Lockie Ferguson/Adam Milne, Trent Boult
” ஏற்கனவே இந்தியா தொடரை கைப்பற்றி விட்ட நிலையில், இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று விட்டால் 3-0 என்ற கணக்கில் அதிரடியாக தொடரை கைப்பற்றியதாய் இருக்கும் “