ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு ஹாக்கியில் பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆடவர் ஹாக்கி பிரிவில் வெண்கலத்திற்கான போட்டியில் இந்திய அணியும் ஜெர்மனியும் மோதிய நிலையில், 5-4 என்ற கணக்கில் வென்று வெண்கலத்தை தன்வசப்படுத்திக்கொண்டது இந்திய ஆடவர் ஹாக்கி அணி.

விறுவிறுப்பாக நடைபெற்ற வெண்கலத்திற்கான ஆட்டத்தின் முதல் இரண்டு பாதியில் 3-1 என்ற கணக்கில் ஜெர்மனி முன்னிலையில் இருந்த போதும் அடுத்து ஆட்டத்தில் அதிரடி காட்டிய இந்திய அணி 3-5 என்று முன்னிலை பெற்றது. இறுதியில் 4-5 என்ற கணக்கில் ஜெர்மனியை வென்று ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஹாக்கியில் பதக்கத்தை வென்றுள்ளது இந்திய ஹாக்கி அணி.

கடைசியாக 1980-இல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய அணி தங்கம் வென்றிருந்தது. அதற்கு பிறகு 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஒலிம்பிக்கில் இந்திய அணி பதக்கத்தை வென்றிருக்கிறது.

“ நம்பிக்கை கொள்வோம் ஒரு நாள் இந்த வெண்கலம் நிச்சயம் தங்கமாக மாறி ஒலிம்பிக் மேடையில் நம் கொடியும் உயரப்பறக்கும் “ 

About Author