அனைத்து விதமான போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றார் கிரிக்கெட்டர் ஸ்ரீசாந்த்!
Sreesanth Announce Retirement From All Form Of Cricket
இந்திய அணிக்காக சில காலங்கள் சிறந்த பவுலராக செயல்பட்ட ஸ்ரீசாந்த் அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார்.
இந்திய அணிக்காக பவுலராக ஒரு காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்தார் ஸ்ரீசாந்த். பின்னர் ஒரு சில பிரச்சினைகளால் சில வருடங்கள் விளையாட முடியாமல் போகவே அவர் இடத்தை பலரும் வந்து நிரப்பி விட்டனர். இந்த சூழலில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார் ஸ்ரீசாந்த்.
“ அவருடைய பவுலிங் ஆக்சனுக்கும், விக்கெட் செலிபிரேசனுக்கும் மட்டுமே தனியாக ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. ஸ்லெட்ஜிங்குக்கு பெயர் போன ஆஸ்திரேயர்களையே வெறித்தனமாக ஸ்லெட்ஜ் செய்வார் “