டி20 களில் ஜொலிக்கும் சூர்ய குமார் யாதவ், இந்தியன் டிவில்லியர்ஸ் என ரசிகர்கள் பெருமிதம்!
தொடர்ந்து டி20 போட்டிகளில் தன் அதிரடியை காட்டி வருவதால் ரசிகர்கள் சூர்யாவை இந்தியன் டிவில்லியர்ஸ் என செல்லமாக அழைத்து வருகின்றனர்.
நேற்று நடந்த நியூசிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் ஒட்டு மொத்த அணியும் 69 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், சூர்ய குமார் யாதவ் மட்டும் 51 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து தனியாக அணியை தூக்கி நிறுத்தினார். இதனால் சூர்யாவை ரசிகர்கள் இந்தியன் டிவில்லியர்ஸ் என்று செல்லமாக அழைத்து வருகின்றனர்.
“ எந்த பக்கம் பீல்டரை நிறுத்தினாலும் அந்த பீல்டரின் தலைக்கு மேல் பந்தை பறக்க விடுவதில் சூர்யா வல்லவராக திகழ்கிறார். இன்னும் பல சாதனைகளை அவர் புரிய வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்திய ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது “