ஆடவர் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி | போலந்து அணியை அதிரடியாக வென்று காலிறுதிக்குள் நுழைந்து இருக்கிறது இந்திய அணி!
Indian Men Junior Hockey Team Step Up To Quarter Finals In Junior World Cup Hockey
ஆடவர் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில், போலந்து அணியை 8-2 என்ற கணக்கில் இந்திய அணி அதிரடியாக வென்று கால் இறுதிக்குள் நுழைந்து இருக்கிறது.
நடப்பு சாம்பியன் ஆக கருதப்படும் இந்திய அணி முதல் லீக் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் 4-5 என்ற கணக்கில் தோற்று இருந்த போதும், கனடாவுடன் 13-1 என்ற கணக்கில் அதிரடியாக ஜெயித்தது. பின்னர் தனது கடைசி லீக் ஆட்டத்தில் போலந்து அணியை 8-2 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்து இருக்கிறது.
“ காலிறுதியில் பெல்ஜியம் அணியை எதிர்கொள்ள இருக்கும் இந்திய ஆடவர் ஜூனியர் ஹாக்கி அணி, இனி வரும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர் வெற்றிகளை பதிவு செய்து இந்த முறையும் கோப்பையை கைப்பற்றும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு “