பாராலிம்பிக்ஸ்: இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார் பவினா படேல்
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் மகளிர் பிரிவில் காலிறுதியை வென்றதன் மூலம் அரையிறுதிக்குள் நுழைந்து இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார் பவினா படேல்.
பாராலிம்பிக்ஸ் மகளிர் டேபிள் டென்னிஸ் கிளாஸ் 4 ஆட்டத்தில் பிரேசிலின் ஒலிவேரியாவை எதிர்கொண்ட இந்திய வீரர் பவினா படேல் அதிரடியாக விளையாடி 3-0 என்ற கணக்கில் எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறினார். அதற்கு பின் காலிறுதியிலும் அதிரடி காட்டிய பவினா உலகின் நம்பர் 2 வீராங்கனையான செர்பியாவின் போரிஸ்லவாவை 3-0 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார்.
பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியா இதுவரை பதக்கமே வென்றதில்லை. தற்போது பவினா படேல் டேபிள் டென்னிஸ் பிரிவில் அரையிறுதிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்து சாதனை படைத்துள்ள நிலையில், அதை தங்கமாக மாற்றுவார் என்று ரசிகர்கள் எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
“ ஒலிம்பிக்கிலும் சரி பாராலிம்பிக்ஸ்சிலும் பதக்க பட்டியலை துவக்கி வைப்பவர்கள் பெண்களாவே இருக்கின்றனர். Go For Gold Bhavina Patel, உலக மேடையில் தேசிய கீதத்தை உங்கள் மூலம் கேட்க காத்திருக்கிறோம் “