சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மிதாலி ராஜ்!

Mithali Raj Announce The Retirement From International Cricket
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலை சிறந்த வீரராக அறியப்படும் மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார்.
இந்திய மகளிர் அணியின் டெண்டுல்கர் ஆக அறியப்படும் மிதாலி ராஜ், தலை சிறந்த வீரர் மட்டும் அல்ல, ஒரு தலை சிறந்த கேப்டனும் கூட. இந்திய மகளிர் அணியை பல்வேறு இக்கட்டான சூழலில் இருந்து மீட்டு எடுத்து இருக்கிறார். இந்த நிலையில் தனது 39 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார்.
“ ஆண்கள் அணியில் தோனி எப்படியோ சச்சின் எப்படியோ, அது போல மகளிர் அணிக்கு மிதாலி ராஜ், ஆனால் அவர் அங்கு தோனியும் சச்சினும் கலந்த கலவை “