சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ஜூலன் கோஸ்வாமி!
Jhulan Goswami Retired From International Cricket
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பவுலராக அறியப்படும் ஜூலன் கோஸ்வாமி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
நேற்றைய ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்திருந்தது. அந்த போட்டியுடன் இந்திய மகளிர் அணியின் நட்சத்திர பவுலராக அறியப்படும் 39 வயதாகும் ஜூலன் நிஷித் கோஸ்வாமி சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார்.
“ 12 டெஸ்ட் போட்டிகளில் 44 விக்கெட்டுகள், பெஸ்ட் 5/25, 204 ஒரு நாள் போட்டிகளில் 255 விக்கெட்டுகள், பெஸ்ட் 6/31, 68 டி20 போட்டிகளில் 56 விக்கெட்டுகள், பெஸ்ட் 5/11 என்று எல்லா தர போட்டிகளிலும் தனது முத்திரையை பதித்த ஜூலன் கோஸ்வாமிக்கு இந்திய அணியினர் 3-0 என்ற ஒயிட்வாஷ்சை பரிசாக அளித்து அனுப்பி வைத்து இருக்கின்றனர் “