காலிறுதிக்கு தகுதி பெறுமா இந்திய மகளிர் ஹாக்கி அணி? – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 4-3 என்ற கணக்கில் போராடி வென்றது.

வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இந்திய வீராங்கனை வந்தனா ஹாட்ரிக்கோல்கள் அடித்து இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-3 என்ற கணக்கில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இந்திய மகளிர் அணிக்கு அனைத்து லீக் ஆட்டங்களும் முடிந்துவிட்ட நிலையிலும் கூட காலிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பில் இன்னமும் தொங்கி கொண்டு தான் இருக்கிறோம்.

அயர்லாந்து-இங்கிலாந்து மோதுகின்ற அந்த கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்து இங்கிலாந்திடம் தோற்றால் மட்டுமே  குரூப் ஏ பிரிவில் இந்திய அணி நான்காவது இடத்தைப்பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற முடியும். ஒரு வேளை அயர்லாந்து வெற்றி பெற்றுவிட்டால், அயர்லாந்து நான்காவது இடத்தை பிடித்துவிடும் இந்தியா வெளியேறிவிடும். ஆகவே ஒட்டு மொத்த இந்திய ஹாக்கி ரசிகர்களும் அயர்லாந்து-இங்கிலாந்து மோதுகின்ற அந்த போட்டியை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர்.

நாமும் காத்திருப்போம்…!

About Author