ஐபிஎல் 2021 | Qualifier 1 | ஆர்சிபியின் ஐபிஎல் கோப்பை கனவு தகர்ந்தது!
Sunil Narine Celebrating The Wicket Of Glenn Maxwell
ஐபிஎல் 2021-இன் குவாலிபையர் 1 போட்டியில், பெங்களுரு அணியை எளிதாக வென்று குவாலிபையர் 2 நோக்கி அடி எடுத்து வைத்திருக்கிறது கொல்கத்தா அணி.
முதலில் ஆடிய விராட் தலைமையிலான பெங்களுரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 39(33) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி இந்த ஸ்கோரையும் த்ரிலிங்காகவே துரத்திப்பிடித்தது. இதன் மூலம் ஆர்சிபியின் கோப்பை கனவு தகர்ந்திருக்கிறது.
கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் நான்கு ஓவர்களை வீசி வெறும் 21 ரன்களே விட்டுக் கொடுத்து நான்கு முக்கியமான விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார். மேலும் பேட்டிங்கிலும் மூன்று சிக்ஸ்கள் உட்பட 26(15) ரன்கள், அணிக்கு எடுத்துக் கொடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்
“ கடைசி முறை ஐபிஎல் கேப்டன், எப்படியும் அணிக்கு கோப்பையை வென்று கையில் கொடுத்து விடுவார் என்று நம்பிக் கொண்டிருந்த ஆர்சிபி அணியின் ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார் விராட் கோலி “