ஐபிஎல் 2021 | Eliminator | கொல்கத்தாவை எதிர்கொள்கிறது பெங்களுரு அணி!
IPL 2021 KKR VS RCB Eliminator Starts Today
ஐபிஎல் 2021-இன் எலிமினேட்டரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி.
இன்று நடக்கும் எலிமினேட்டரில் மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணி, விராட் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.
இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 28 போட்டிகளில் 15 போட்டிகளில் வென்று கொல்கத்தாவே முன்னிலை வகிக்கிறது. தற்போதைய சூழலில் இரு அணிகளும் பலம் வாய்ந்ததாகவே இருப்பதால் இன்றைய போட்டி ஷார்ஜா களத்தில் அனல் பறக்க பறக்க அமர்க்களமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
“ ஏற்கனவே குவாலிபையர் 1-இல் முதல் அணியாக பைனலுக்கு தகுதி பெற்றிருக்கிறது சென்னை அணி, இந்த எலிமினேட்டரில் யார் வெற்றி பெறுகிறாரோ அந்த அணி குவாலிபையர் 2-வில் டெல்லியை எதிர் கொள்ளும் “