IPL 2022 | Match 1 | CSK v KKR | ‘ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வென்றது கொல்கத்தா’
IPL 2022 Match No 1 KKR VS CSK KKR Won By 6 Wickets
ஐபிஎல் 2022-யின் முதல் போட்டியில் சென்னையை எளிதாக வென்று இருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
முதலில் ஆடிய சென்னை அணி மகேந்திர சிங் தோனி அவர்களின் அரை சதத்துடன், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி, 18.3 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது.
“ எம்.ஜி.ஆர் போல ஒரு அடியை வாங்கி விட்டு தான் அடிக்க ஆரம்பிப்போம் என்ற பாணியில் சி.எஸ்.கே இந்த ஐபிஎல்லில் முதல் அடியை வாங்கி இருக்கிறது. இனி அடுத்தடுத்த போட்டிகளில் திருப்பி அடிக்கும் என நம்புவோம் “