ஐபிஎல் 2022 | சிஎஸ்கே | ‘தலைமைப் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைக்கும் தோனி’
IPL 2022 MSD Has Handed Captaincy To Jadeja Ahead Of This IPL
அணியின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஐபில் 2022 தொடரிலேயே சிஎஸ்கே அணியின் தலைமைப்பொறுப்பை தோனி, ஜடேஜாவிடம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சிஎஸ்கே என்றாலே தோனி என்ற அளவிற்கு சிஎஸ்கே ரசிகர்களால் கொண்டாடப்படுவர் மகேந்திர சிங் தோனி. இதுவரை சென்னை அணிக்காக 4 ஐபிஎல் கோப்பைகள், 2 சாம்பியன் லீக் கோப்பைகள் என்று 6 கோப்பைகளை கைப்பற்றிக் கொடுத்தவர் தற்போது அணியின் நலனுக்காக தனது தலைமைப் பொறுப்பை ஜடேஜாவுக்கு விட்டுக்கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ என்ன இருந்தாலும் தோனியின் தலைமையை தான் ரசிகர்கள் விரும்புவார்கள். இந்த ஒரு முறை தோனியின் தலைமையில் அணியைப் பார்த்துவிட்டு அடுத்த முறையாவது ஜடேஜாவை தலைமைக்கு கையில் எடுங்கள் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் “