IPL 2022 | ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஆனார் ஸ்ரேயஸ் ஐயர்’
![IPL 2022 Shreyas Iyer Named As Captain Of KKR](https://i0.wp.com/idamporul.com/wp-content/uploads/2022/02/IPL-2022-Shreyas-Iyer-Named-As-Captain-Of-KKR.png?fit=640%2C360&ssl=1)
IPL 2022 Shreyas Iyer Named As Captain Of KKR
வருகின்ற ஐபிஎல் 2022-ற்கு கொல்கத்தா அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார் ஸ்ரேயஸ் ஐயர்.
ஐபிஎல் ஏலம் தற்போது தான் நடந்து முடிந்த நிலையில் ஸ்ரேயஸ் ஐயர் 12.25 கோடிகளுக்கு கொல்கத்தா அணிக்காக எடுக்கப்பட்டு இருந்தார். முன்னதாக இயான் மார்கன் கொல்கத்தாவிற்கு தலைமை தாங்கிய நிலையில், தற்போது கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
“ இதற்கு முன் டெல்லி அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த அனுபவத்தை இனி கொல்காத்தா அணியின் கீழ் காண்பித்து அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது “