IPL 2023 | Final | GT v CSK | ‘இன்றும் மழைக்கு வாய்ப்பு, இறுதிப்போட்டி நடைபெறுமா?’
IPL 2023 Final CSK Facing GT Today Idamporul
மழை காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை மற்றும் குஜராத் இடையிலான இறுதிப்போட்டி இன்று ரிசர்வ் தினத்தில் நடக்க இருக்கிறது.
விடாத மழையால் நேற்று அகமதாபாத்தில் நடைபெற இருந்த குஜராத் மற்றும் சென்னை இடையிலான இறுதிப்போட்டி இன்று ரிசர்வ் டேவில் நடக்க இருக்கிறது. வானிலை நிலவரப்படி இன்றும் அகமதாபாத்தில் மழை இருக்கும் எனவே கூறுகின்றனர். ஒரு வேளை இன்றும் மழை நீடித்தால் கோப்பை குஜராத் அணியிடம் ஒப்படைக்கப்படும்.
“ போட்டி நடைபெறாத பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் வகிக்கும் அணிக்கு கோப்பை அளிக்கப்படும் என்ற ரூல் இருப்பதால், இன்றும் மழை வந்தால் அது சென்னை அணி ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாக இருக்கும் “