சென்னை ரசிகர்களை சாடி காட்டமாக ட்வீட் போட்ட ஜடேஜா, என்ன தான் காரணம்?
IPL 2023 Jadeja Controversial Tweet For Fans Idamporul
சென்னை ரசிகர்களை சாடி, ஜடேஜா காட்டமாக ட்வீட் போட்டு இருப்பது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐபிஎல் லீக் போட்டிகளில் பவுலிங்கில் ஜடேஜா மாஸ் காட்டினாலும் கூட ஒரு சில போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்ப தான் செய்தார். இதனால் கிரவுண்டிலும் சரி, இணையத்திலும் சரி ரசிகர்கள் தொடர்ந்து ஜடேஜாவை விமர்சித்து வந்தனர். இதனால் காண்டு ஆன ஜடேஜா நேற்றைய போட்டியில் அப்ஸ்டாக்ஸ் அவார்ட் வாங்கியதும், அப்ஸ்டாக்ஸ்க்கு கூட யார் மதிப்பு மிக்க வீரர் என்று தெரிகிறது, ஒரு சில ரசிகர்களுக்கு தெரியவில்லை என்று காட்டமாக ஒரு ட்வீட் போட்டு இருக்கிறார்.
“ ஒரு சர்வதேச வீரர் என்பவர் புகழ்ச்சியையும், இகழ்தலையும் சரிசமமாக எடுத்துக் கொண்டு அடுத்தடுத்தக் கட்டத்திற்கு சென்று கொண்டே இருக்க வேண்டும். ரசிகர்களாகியவர்களும் ஒரு சர்வதேச வீரரை தரக்குறைவாக விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் “