IPL 2023 | Match No 47 | ‘இன்றைய போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது கொல்கத்தா’
IPLS 2023: KKR vs SRH
ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா அணி.
இன்று நடக்க இருக்கும் ஐபிஎல்-லின் 47 ஆவது லீக் போட்டியில் ஏய்டன் மார்கரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணியின் ஹோம்கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.
Sunrisers Hyderabad Probable XI: Abhishek Sharma, Mayank Agarwal, Rahul Tripathi, Aiden Markram (C), Harry Brook, Heinrich Klaasen (WK), Abdul Samad, Marco Jansen, Bhuvneshwar Kumar, Mayank Markande, Umran Malik
Kolkata Knight Riders Probable XI: Jason Roy, Rahmanullah Gurbaz (WK), Venkatesh Iyer, Nitish Rana (C), Andre Russell, Rinku Singh, Shardul Thakur, Sunil Narine, Harshit Rana, Varun Chakaravarthy, Suyash Sharma
47 போட்டிகள் முடிந்தும் கூட புள்ளிப்பட்டியலில் முதல் இடம் கூட இன்னும் நிரந்தரம் இல்லாமல் இருக்கிறது, ப்ளே ஆப் தகுதிக்கு ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு வெற்றியும் ஒவ்வொரு அணிக்கும் அவசியமாகிறது, இதுவரை எந்த ஐபிஎல்-லிலும் இல்லாத அளவிற்கு முதல் நான்கு இடங்களுக்கு போட்டி பயங்கரமாக இருக்கிறது.
“ இனி ஒவ்வொரு போட்டியிலும் நிச்சயம் அதகளம் தான், ஒரு பக்கம் மும்பையும் புள்ளிப்பட்டியலில் கொஞ்சம் கொஞ்சமாக மேலெழும்பி வருவது மற்ற அணிகளுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது “