IPL 2023 | Match No 9 | RCB v KKR | ’81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா பிரம்மாண்ட வெற்றி’
IPL 2023 Match No 9 KKR VS RCB Kolkata Won By 83 Runs Idamporul
ஐபிஎல் 2023-யின் ஒன்பதாவது போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுரு அணியை வீழ்த்தி இருக்கிறது கொல்கத்தா.
ஐபிஎல் 2023-யின் நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்தாலும் குர்பாஸ் 57(44), ஷர்துல் தாகூர் 68(29) அதிரடியில் 204 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பெங்களுரு அணி கொல்கத்தாவின் சுழலை தாக்கு பிடிக்க முடியாமல் 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
“ முதல் லீக் போட்டியில் அதிரடி காட்டிய பெங்களுரு அணி, இரண்டாவது போட்டியில் அப்படியே தலை கீழாக செயல்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. பெங்களுரு அணி பழைய பார்முக்கு வந்துவிட்டது என்றது நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர் “