ஹர்திக்கின் தவறான முடிவுகளால் கலக்கம் காணும் மும்பை அணி!
அவ்வப்போது ஹர்திக் பாண்டியா எடுக்கும் தவறான முடிவுகளால் மும்பை அணி கலக்கம் கண்டு வருகிறது.
மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதில் இருந்தே, பல சர்ச்சைகள் கிளம்பி வருகிறது. அவ்வப்போது ஆர்வக்கோளாறுகளால் அவர் எடுக்கும் முடிவுகளால் மும்பை அணி கலக்கம் கண்டு வருகிறது. நேற்று சென்னைக்கு எதிரான போட்டியில் கூட அவர் செய்த சில தவறுகளே அணிக்கு பாதகமாய் ஆகி இருக்கிறது.
கடந்த போட்டியில் 5 விக்கெட்டுக்களை குவித்த ஜஸ்ப்ரிட் பும்ராவை ஏன் நியூ பாலில் கொண்டு வரவில்லை. வான்கடேவில் முதல் 3 ஓவர்கள் பாஸ்ட் பவுலர்களுக்கு எடுப்பாக அமையும் என்று தெரிந்தும் முதல் ஓவரை ஸ்பின்னர் நபி அவர்களின் கையில் கொடுத்தது ஏனோ? கடைசி ஓவரை பவுலர் ஆகாஷ் மத்வால் அவரின் கைகளில் கொடுக்காமல், கேப்டன் ஹர்திக் தானே வீசுகிறேன் என்று 26 ரன்கள் விட்டுக் கொடுத்தது தான் ஏனோ? என ஹர்திக்கை சுற்றி பல கேள்விகள் உலாவி வருகின்றன.
ஹர்திக் தனது அணியில் இருக்கும் சீனியர்களின் அட்வைஸ்களை கேட்க மறுக்கிறார் என்ற ஒரு தகவலும் பொதுவாக பேசப்பட்டு வருகிறது. பீல்டு பொசிசனிலும், பவுலிங் ரொட்டேசனிலும் ரோஹிட் போன்ற சீனியர்களின் அட்வைஸ்களை ஹர்திக் கொஞ்சம் காது கொடுத்து கேட்கலாம். சரியான கடப்பாறை லைன் அப் அணியை வைத்துக் கொண்டு, சிறு சிறு தவறான முடிவுகளால் ஜெயிக்க வேண்டிய போட்டியிலும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை தோற்றே வருகிறது.
“ ஹர்திக் கொஞ்சம் ருதுராஜ் போல பணிந்து ரோஹிட்டின் தலைமைப் பண்பில் இருக்கும் சிறு சிறு விடயங்களை கேட்டு அறிந்து செயல்பட வேண்டும். இல்லையேல் மும்பை அணியின் எதிர்காலம் என்பது கேள்விக் குறி தான் “