IPL 2024 | ‘மீண்டு வந்தால் மீண்டும் களத்திற்கு வருவேன் – எம் எஸ் தோனி’
MS Dhoni Doubtful For 2024 IPL Fact Here Idamporul
தற்போது மூட்டில் ஒரு அறுவை சிகிச்சை இருக்கிறது, அதில் இருந்து மீண்டு வந்தால் மீண்டும் களத்திற்கு வருவேன் என தோனி பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
எம் எஸ் தோனி அவர்களுக்கு மூட்டில் ஒரு அறுவைச் சிகிச்சை இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் அதில் இருந்து மீண்டு வரும் காலத்தை பொறுத்து 2024 ஐபிஎல்லில் கலந்து கொள்வது குறித்து முடிவெடுக்க இருக்கிறாராம். கலந்து கொள்ள முடியவில்லை எனில் சிஎஸ்கே அணியின் ரசிகராக களத்தில் இருப்பேன் எனவும் தோனி கூறி இருக்கிறார்.
“ ஒரு அணிக்கு இவ்வளவு விசுவாசமான கேப்டனை எந்த ப்ரான்ச்சைஸும் வைத்து இருக்கவில்லை என்பது நிச்சயம் சிஎஸ்கேவிற்கு பெருமையே “