IPL 2024 | Match No 15 | ‘இன்றைய போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது பெங்களுரு’

IPL 2024 Match No 15 RCB Facing LSG Today Idamporul

IPL 2024 Match No 15 RCB Facing LSG Today Idamporul

ஐபிஎல் 2024 யின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு.

ஐபிஎல் 2024 சீசனின் 15 ஆவது போட்டியில் நிகோலஸ் பூரான் தலைமையிலான லக்னோ அணியானது, டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பெங்களுரு அணியின் ஹோம்கிரவுண்டான சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

நேருக்கு நேர்

இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 4 போட்டிகளில், 3 போட்டிகளில் பெங்களுரு அணியும், 1 போட்டியில் லக்னோ அணியும் வெற்றி பெற்று இருக்கிறது.

கணிப்பு

பெங்களுரு அணியின் பலம் அவர்களின் பேட்டிங் ஆர்டர் தான். பவுலிங்கில் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறந்த பவுலர்கள் இல்லை. ஒன்று அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும். இல்லையேல் ரன்களை கட்டுப்படுத்த வேண்டும். இந்த இரண்டு டிபார்மெண்ட்களிலுமே பெங்களுரு அணி திணறி வருகிறது. மறுபக்கம் லக்னோ ஒரு சரியான நிலையான அணியை கையில் வைத்து இருப்பதால் தற்போதைக்கு வெற்றி வாய்ப்பு என்பது லக்னோவிற்கே அதிகம் இருக்கிறது.

ஸ்குவாட்ஸ்

Royal Challengers Bengaluru Probable XII: Faf du Plessis, Virat Kohli, Cameron Green, Glenn Maxwell, Rajat Patidar, Anuj Rawat, Dinesh Karthik, Alzarri Joseph/Reece Topley, Mayank Dagar, Mohammad Siraj, Vyshak Vijaykumar, Mahipal Lomror/Yash Dayal

Lucknow Super Giants Probable XII: KL Rahul, Quinton de Kock, Devdutt Padikkal, Marcus Stoinis, Nicholas Pooran, Ayush Badoni, Krunal Pandya, Ravi Bishnoi, Mohsin Khan, Naveen-ul-Haq, Mayank Yadav, M Siddharth

“ இந்த சீசனில் ஹோம்கிரவுண்டில் ஏற்கனவே ஒரு தோல்வியை சந்தித்து பெங்களுரு அணி, இந்த போட்டியில் ஆவது வெற்றி பெற்று பெங்களுரு அணி ரசிகர்களை மகிழ்வு படுத்துமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author