IPL 2024 | Match No 17 | ‘இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது குஜராத்’

IPL 2024 Match No 17 PBKS Facing GT Today Idamporul

IPL 2024 Match No 17 PBKS Facing GT Today Idamporul

ஐபிஎல் 2024 சீசனின் 17 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது குஜராத் டைட்டன்ஸ்.

இன்று நடக்கவிருக்கும் ஐபிஎல் 2024 சீசனின் 17 ஆவது போட்டியில், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, சுப்மான் கில் தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அகமதாபாத், நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

நேருக்கு நேர்

இதுவரை இரு அணிகளும் மூன்று போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடி இருக்கின்றனர். அதில் குஜராத் அணி இரு போட்டிகளிலும், பஞ்சாப் அணி ஒரு போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறது.

கணிப்பு

பவுலிங்கை பொறுத்தவரை இரு அணிகளும் சரியான பலத்தை கொண்டு இருக்கின்றன. பேட்டிங்கை எடுத்துக் கொண்டால் துவக்க ஆட்டக்காரர்கள் இரு அணிகளுக்குமே சரிசமமான பலத்துடன் அமைந்து இருக்கின்றனர். மிடில் ஆர்டரை தேடினால் அது பஞ்சாப் அணிக்கு இருப்பதாகவே தெரியவில்லை. நிச்சயம் அது ஒன்று தான் பஞ்சாப் அணியின் பலவீனம். அப்படி பார்க்கும் போது வெற்றி சற்றே குஜராத் அணியின் பக்கம் இருக்கிறது.

ஸ்குவாட்ஸ்

Gujarat Titans Probable XI: Shubman Gill (C), Wriddhiman Saha (wk), Sai Sudharsan, Azmatullah Omarzai, David Miller, Vijay Shankar, Rahul Tewatia, Rashid Khan, Noor Ahmed, Umesh Yadav, Darshan Nalkande [Impact sub: Sai Sudharshan for Mohit Sharma if they bat first, or vice-versa]

Punjab Kings Probable XI: Shikhar Dhawan (C), Jonny Bairstow, Prabhsimran Singh, Jitesh Sharma (wk), Liam Livingstone, Sam Curran, Shashank Singh, Harshal Patel, Harpeet Brar, Kagiso Rabada, Rahul Chahar [Impact sub: Arshdeep Singh for Prabhsimran if they bat first, or vice-versa]

” லிவிங்ஸ்டன் போன போட்டியின் போதே காயத்துடன் தென்பட்டார், பஞ்சாப் அணிக்கு இருக்கும் ஒரே ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அவர் தான், அவர் பங்கேற்பாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் “

About Author