IPL 2024 | ‘ஒரு வழியாக மும்பை இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது’
IPL 2024 MI VS DC Finally Mumbai Registered Their First Win In This Season Idamporul
ஒரு வழியாக மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ்க்கு எதிராக இந்த சீசனின், முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது.
தொடர்ந்து 3 தோல்விகளுடன் டெல்லிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் களம் இறங்கிய, ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது. ஒரு வழியாக ஹர்திக் ஒரு சரியான அணிக் கலவையை கண்டு பிடித்து இருக்கிறார் என்றே சொல்லலாம்.
துவக்கத்திற்கு ரோஹிட், இஷான் கிஷன், அவர்கள் காட்டும் அதிரடியை அப்படியே கொண்டு செல்ல மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, மிடில் ஆர்டரில் பந்துகளை சிதற விட டிம் டேவிட், ரோமரியோ ஷெப்பர்டு, ஆல்ரவுண்டருக்கு நபி, யார்க்கர்களை சொருவ பும்ரா, பந்தை சுழற்றி வீச சாவ்லா, விக்கெட்டுகளை எடுக்க ஆகாஷ் மத்வால், கொயேட்சே என இப்போது தான் மும்பை அணிக்கு ஒரு சரியான பிளேயிங் 11 கிடைத்து இருக்கிறது.
“ வந்துட்டோம்னு சொல்லு, திரும்ப வந்துட்டோம்னு சொல்லு என்ற பாணியில் பழைய பன்னீர் செல்வமாக மாறி இருக்கிறது மும்பை அணி “