IPL 2024 | Match No 22 | ’இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது சென்னை’
ஐபிஎல் 2024-யின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் 2024 சீசனின் 22 ஆவது லீக் போட்டியில், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது, ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை அணியின் ஹோம் கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.
நேருக்கு நேர்
இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 28 போட்டிகளில் 18 போட்டிகளில் சென்னை அணியும், 10 போட்டிகளில் கொல்கத்தா அணியும் வெற்றி பெற்று இருக்கின்றன.
கணிப்பு
சென்னை அணியை பொறுத்தவரை கடைசி இரண்டு போட்டிகளாகவே துவக்க பேட்டிங் மோசமாக இருக்கிறது, அந்த ஒன்று தான் சென்னை அணியில் இருக்கும் தற்போதைய ஒரே பிரச்சினை. மற்றபடி ஒரு மாஸ் டீம் தான். பவர் பிளேவை மட்டும் ருதுராஜ் – ரச்சின் கூட்டணி மேக்சிமைஸ் செய்து விட்டால் வெற்றி சென்னை அணியின் பக்கம் தான் என்பதில் ஐயமில்லை.
ஸ்குவாட்ஸ்
Chennai Super Kings Probable XI: Rachin Ravindra, Ruturaj Gaikwad, Ajinkya Rahane, Shivam Dube, Daryl Mitchell, Ravindra Jadeja, Sameer Rizvi/Mitchell Santner, MS Dhoni, Deepak Chahar, Tushar Deshpande, Maheesh Theekshana
[Impact Substitute: Mukesh Choudhary]
Kolkata Knight Riders Probable XI: Sunil Narine, Phil Salt, Angkrish Raghuvanshi, Shreyas Iyer, Venkatesh Iyer, Rinku Singh, Andre Russell, Ramandeep Singh, Mitchell Starc, Harshit Rana, Varun Chakravarthy
[Impact Substitute: Suyash Sharma]
“ நிச்சயம் இந்த போட்டி அதிரடி களமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு ஹைஸ்கோர் போட்டியாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது “