IPL 2024 | ‘ராஜஸ்தான் அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது குஜராத்’
IPL 2024 RR VS GT Rajasthan Winning Streak Ended Details Here Idamporul
இந்த சீசனை தொடர்ந்து 4 வெற்றிகளுடன் துவங்கிய ராஜஸ்தான் அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறது குஜராத் அணி.
முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, சஞ்சு சாம்சன் 68(38) மற்றும் ரியான் பராக் 76(48) அதிரடியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 196 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய குஜராத் அணி மெதுவாக ஆட்டத்தை துவங்கி சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறி கொடுத்து இருந்தாலும் கூட ராஷித் கான் 24(11) பினிஷர் ரோலில் செயல்பட்டு அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
” தோல்வியைத் தழுவினாலும் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 6 போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது குஜராத் “