IPL 2024 | ‘இன்றைய போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது டெல்லி’

IPL 2024 Match No 9 DC Facing RR Today Idamporul

IPL 2024 Match No 9 DC Facing RR Today Idamporul

இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது டெல்லி அணி.

ஐபிஎல் 2024 -யின் ஒன்பதாவது போட்டியில் சஞ்சுசாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி. ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

நேருக்கு நேர்

இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 27 போட்டிகளுள், ராஜஸ்தான் அணி 14 வெற்றிகளும்,டெல்லி 13 வெற்றிகளும் பெற்று இருக்கின்றன.

கணிப்பு

ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி பலம் வாய்ந்த அணியாக தென்பட்டாலும் கூட, ராஜஸ்தான் அணியின் சமநிலையை விட டெல்லி அணியின் சமநிலை என்பது சற்றே குறைவு தான், பேட்டிங் வரிசையிலும் சரி, பவுலிங் யூனிட்டிலும் சரி ஒரு சரியான மிக்ஸிங்கை வைத்து இருக்கிறது ராஜஸ்தான். அந்த வகையில் இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கைகளே சற்றே ஓங்கி இருக்கிறது.

ஸ்குவாட்ஸ்

Rajasthan Royals Probable XI: Yashasvi Jaiswal, Jos Buttler, Sanju Samson, Riyan Parag, Shimron Hetmyer, Dhruv Jurel, Rovman Powell/Nandre Burger, R Ashwin, Avesh Khan, Trent Boult, Sandeep Sharma, Yuzvendra Chahal.

Delhi Capitals Probable XI: David Warner, Mitchell Marsh, Abhishek Porel, Ricky Bhui, Rishabh Pant, Tristan Stubbs, Axar Patel, Sumit Kumar/Kumar Kushagra, Anrich Nortje, Kuldeep Yadav, Khaleel Ahmed, Ishant Sharma

“ ரிஷப் பண்ட் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார், ஏற்கனவே முதல் போட்டியில் டெல்லி தோல்வியை தழுவி இருப்பதால், டெல்லி அணிக்கு சீசனை பாசிட்டிவாக எடுத்துச் செல்ல நிச்சயம் இந்த போட்டியின் வெற்றி அவசியமாகிறது, என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author