ஐபிஎல் 2024 | ‘மீண்டும் பெங்களுரு அணியின் கேப்டன் ஆகிறார் விராட் கோஹ்லி?’
IPL 2024 Virat Kohli Taking Lead Of RCB Again Fact Here Idamporul
விராட் கோஹ்லி அவர்கள் மீண்டும் பெங்களுரு அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஐபிஎல்-லில் விராட் கோஹ்லி ஒரு சில காரணங்களால் ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதன் காரணமாக, டு பிளஸ்சிஸ் ஆர்சிபி அணியை வழி நடத்தினார். ஆனால் தற்போது ஐபிஎல் 2024 -யில் டு பிளஸ்சிஸ் பங்கேற்பது சந்தேகத்திற்குரியதாக இருப்பதால் மீண்டும் விராட் கோஹ்லி ஆர்சிபி அணியை வழி நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ விராட் கோஹ்லி மீண்டும் தலைமை ஏற்க இருப்பதால், இந்த முறையாவது பெங்களுரு அணி சிறப்பாக செயல்பட்டு கேப்டன் கோஹ்லியின் கைகளை கோப்பையை ஒப்படைக்க வேண்டும் என ரசிகர்கள் இணையத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றனர் “