தோனிக்கு பிறகு சிஎஸ்கேவின் தலைமையை ரோஹிட் ஏற்றால் நன்றாக இருக்கும் – ராயுடு
Ambati Rayudu Wants Rohit Sharma Lead CSK After Dhoni Retirement Idamporul
தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணியின் தலைமையை ரோஹிட் ஷர்மா ஏற்றால் நன்றாக இருக்கும் என அம்பத்தி ராயுடு கூறி இருக்கிறார்.
ஆரம்பம் முதல் இன்று வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக திறம்பட செயல்பட்டு வரும் தோனி ஒரு வேளை இந்த சீசனுக்கு பின் ஓய்வை அறிவித்து விட்டால், மும்பை அணியின் முன்னாள் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹிட், சென்னை அணியின் தலைமை பொறுப்பை ஏற்றால் நன்றாக இருக்கும் என சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் அம்பத்தி ராயுடு விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.
“ தோனி இடத்தில் இன்னொருவருவரை பார்ப்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு கடினமாக இருந்தாலும் கூட, ரோஹிட் சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டால் நிச்சயம் தோனி போலவே சிஎஸ்கேவை வழிநடத்துவார் என்பதில் ஐயமில்லை “