IPL | ‘லக்னோவை விட்டு விலகுகிறாரா கவுதம் காம்பீர்?’
IPL Gautam Gambhir Leaving LSG Fact Here Idamporul
லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீர், லக்னோவை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
லக்னோ அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த கவுதம் காம்பீர் தற்போது நிர்வாகத்திடம் ஏற்பட்ட ஒரு சில மோதல்களால் அணியை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் சீசனில் கொல்கத்தாவுடன் ஆலோசகராகவோ, பயிற்சியாளரகவோ செயல்பட காம்பீர் திட்டமிட்டு இருகிறாராம்.
காம்பீரை பொறுத்தவரை ஒரு அணியை கையில் கொடுத்து விட்டால் அந்த அணி முழுக்க முழுக்க அவர் செயல்பாட்டில் மட்டும் இருக்க வேண்டும் என்று நினைப்பாராம். ஆனால் லக்னோ அணியின் நிர்வாகம் தொடர்ந்து அவரது முடிவுகளில் குறுக்கீடு செய்து வருவதால் காம்பீர் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
“ கொல்கத்தா தரப்பில் இருந்து இன்னும் காம்பீருக்கு அழைப்பு ஏதும் வரவில்லையாம். வரும் பட்சத்தில் காம்பீர் பயிற்சியாளராகவோ, ஆலோசகராகவோ நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது “