ரோஹிட் ஷர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது தவறு – யுவராஜ் சிங்
ரோஹிட் ஷர்மாவை மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது தவறு என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
ஹர்திக் பாண்டியாவை குஜராத்தில் இருந்து மும்பை அணிக்கு இழுப்பதற்காக, மும்பை அணி நிர்வாகம், ரோஹிட் ஷர்மாவிடம் இருந்து கேப்டன் பொறுப்பை புடுங்கி, ஹர்திக்கிடம் ஒப்படைப்பதாக ஹர்திக்கிடம் உத்தரவாதம் அளித்தது. இந்த உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்டு ஹர்திக்கும் குஜராத் அணியில் இருந்து விலகி மீண்டும் மும்பை அணிக்கு தாவினார்.
மும்பை அணியின் இந்த முடிவு ரசிகர்கள் பலரையும் சற்றே குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் தான் இந்திய அணியில் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், ’அது எப்படி 5 முறை அணிக்கு கோப்பையை வாங்கி கொடுத்த ஒரு கேப்டனை பொறுப்பில் இருந்து தூக்கி விட்டு மனசாட்சியே இல்லாமல் இன்னொருவரை கேப்டனாக நியமிக்கிறீர்கள்? நான் பொறுப்பில் இருந்தால் ரோஹிட்டையே கேப்டனாக வழி நடத்த கூறி விட்டு ஹர்திக்கை வேண்டுமானால் துணை கேப்டனாக நியமித்து இருப்பேன்’ என கூறி இருக்கிறார்.
“ ஹர்திக் பாண்டியா குஜராத் அணியை சிறப்பாக தான் வழிநடத்தினார், ஆனாலும் கூட ரோஹிட் ஷர்மா அவர்களின் தலைமைப் பண்பு என்பது ஒரு அதிரடியானதாக இருக்கும். நிச்சயம் மும்பை அணியின் ரசிகர்கள் ரோஹிட்டின் தலைமையை மிஸ் செய்வார்கள் “