” இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பற்றிய அரிய தகவல்கள் ”
டிசம்பர் 11, 1969 யில் மயிலாடுதுறையில் பிறந்தவர் விஸ்வநாதன் ஆனந்த். தாயார் சுஷிலா, சதுரங்கத்தில் கில்லாடியான சுஷிலாவிடம் இருந்து 5 வயதில் இருந்தே விஸ்வநாதன் ஆனந்த் சதுரங்கம் கற்க ஆரம்பித்தார்.
தனது 14 வயதில் இளையோர்களுக்கான உலகளாவிய செஸ் சாம்பியன்சிப்பில் பட்டம் வென்றார். 1988 யில் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார். அதே வருடத்தில் அவருக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. பின்னர் 1990-91 காலக்கட்டத்தில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
யாருடா இவன், என உலகளாவிய சாம்பியன்கள் உணருவதற்குள் 2000, 2007, 2008, 2010, 2012 என ஐந்து முறை உலகளாவிய சதுரங்க சாம்பியன் ஆனார் விஸ்வநாதன் ஆனந்த். ஆனந்த் அடித்து விளையாடி வென்ற அனைவருமே அன்றைய காலக்கட்டங்களில் சதுரங்க விளையாட்டின் ஜாம்பவான்கள். 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய விருதான பத்ம விபூசனை ஆனந்த் அவர்களுக்கு வழங்கி இந்திய அரசு அவரை கவுரவித்தது.
பொறுமையான நகர்த்துதலில் ஆரம்பித்து, தோற்பது போல விளையாடி, எதிராளியை கொஞ்ச நேரம் மகிழ வைத்து, கடைசியில் எழ முடியாத அளவுக்கு அடித்து வீழ்த்துவது தான் விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் ஆட்ட பாணி.
“ உலகளாவிய அளவில் இந்தியர்களின் பெருமையை மேடையேற்றிய விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் புகழையும், அவர் சதுரங்கத்தில் செய்த சாதனையையும் நிச்சயம், இந்த உலகம், யுகங்கள் கடந்தும் பேசிக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை “