நாயகன் மீண்டும் வருகிறான், அயர்லாந்து தொடரில் இணையும் பும்ரா!
Bumrah Listed In Ireland T20 Series He Is Back Idamporul
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் பும்ரா இணைக்கப்பட்டு இருக்கிறார்.
கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜஸ்ப்ரீட் பும்ரா விளையாடி பார்த்தது. அதற்கு பின் தொடர் காயங்களால் எந்த பெரிய போட்டிகளிலும் பும்ராவின் பெயர் இல்லை. தற்போது அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்ப்ரீட் பும்ரா இணைக்கப்பட்டு இருப்பது துவண்டு போன இந்திய அணிக்கு நிச்சயம் உந்துதலாக இருக்கும்.
“ ஜஸ்ப்ரீட் பும்ராவின் ரிட்டன்ஸ் நிச்சயம் இந்திய அணிக்கு ஒரு ப்ளஸ் தான் என்றாலும், இந்திய அணி மீதி 10 இடங்களையும் இன்னமும் நிரப்பாமல் தான் இருக்கிறது. இப்படியே போனால் உலக கோப்பைக்கு முன் ஒரு திட்டவட்டமான அணியை தேர்வு செய்வது என்பது பிசிசிஐக்கு மிகவும் கடினமாகி போகும் “