ஹர்திக் பாண்டியா நீக்கம், கேப்டனாகும் ஜஸ்ப்ரீட் பும்ரா!
IRE VS IND T20 Series Jasprit Bumrah Take A Lead Idamporul
அயர்லாந்துக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியாவிற்கு ரெஸ்ட் கொடுத்து விட்டு கேப்டனாக பும்ராவை களம் இறக்கி இருக்கிறது பிசிசிஐ.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில், ஹர்திக் பாண்டியாவிற்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு, ஜஸ்ப்ரிட் பும்ராவை அணிக்கு கேப்டனாக நியமித்து இருக்கிறது பிசிசிஐ. துணை கேப்டனாக ருதுராஜ் கெயிக்வாட் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய ரின்கு சிங்கிற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.
” எவ்வளவு தான் பிசிசிஐ தேர்வுக்குழுவை ஒட்டு மொத்தமாக அனைவரும் சாடினாலும் கூட, அது அது இஸ்டத்திற்கு தான் ஆடிக்கொண்டு இருக்கிறது. இப்படியே சென்றால் இந்திய அணிக்கு இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் வெண்கலக்கிண்ணம் கிடைப்பது கூட கடினம் தான் “