முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக நியூசிலாந்து பறக்க இருக்கும் பும்ரா!
முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக இந்தியாவின் நட்சத்திர வீரர் பும்ரா நியூசிலாந்து பறக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பவுலராக அறியப்படுபவர் ஜஸ்ப்ரீட் பும்ரா. நீண்ட நாளாகவே முதுகு தண்டுவட வலியால் அவதிப்பட்டு வரும் பும்ரா பெரும்பாலான முக்கிய தொடர்களை புறக்கணித்து வருகிறார். தற்போது அதன் சிகிச்சைக்காக நியூசிலாந்து வரை பயணிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ சிகிச்சை முடித்து விட்டு நேராக ஐபிஎல் போட்டிகளில் பும்ரா கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது, பிசிசிஐ உடல் முழு தகுதியுடன் இருந்தால் மட்டும் வீரர்களை ஐபிஎல்லில் கலந்து கொள்ள அறிவுறுத்தி வருகிறது “