டி20 உலககோப்பை தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியானர் ஜஸ்ப்ரீட் பும்ரா!
Jasprit Bumrah Out Of T20 Worldcup
காயம் காரணமாக டி20 உலககோப்பையில் இருந்து பும்ரா வெளியேறி இருப்பதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
இந்திய அணியின் நட்சத்திர பவுலராக அறியப்படும் ஜஸ்ப்ரீட் பும்ரா, காயம் காரணமாக வருகின்ற டி20 உலககோப்பை போட்டியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக பிசிசிஐ அறிவித்து இருக்கிறது. பும்ரா இடத்தை நிரப்ப யாராலும் முடியாது என்றாலும் முகமது ஷமியை ஸ்குவாடில் இணைக்க ரசிகர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.
“ எந்த கட்டத்திலும் பௌலிங் செய்ய கூடிய திறமை கொண்டவர் ஜஸ்ப்ரீட் பும்ரா, அவர் இடத்தை நிரப்புவது என்பது இந்திய அணிக்கு சற்றே கடினமான காரியம் தான் “