இந்திய அணியின் நட்சத்திர பவுலர் ஜஸ்ப்ரீட் பும்ரா அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!
Happy Birthday Jasprit Bumrah Idamporul
இந்திய அணியின் யார்க்கர் மன்னனாக அறியப்படும் பும்ரா அவர்களுக்கு இன்று 29 ஆவது பிறந்த நாள்.
இந்திய அணியின் ஒரு தலை சிறந்த பந்து வீச்சாளர், யார்க்கர் மன்னன், பினிஷர் இன் டெப்த் பவுலிங் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற பும்ராவை இந்திய ஜெர்சியில் பார்த்தே வருடங்கள் ஆகிறது. ஐபிஎல்-லில் மட்டும் தென்படுகிறார். இன்று 29 வயதை நிறைவு செய்து இருக்கும் அவர் நல்ல பிட்னஸ்சுடன் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனைகளாக இருக்கிறது.
“ பும்ரா இல்லாமல் இந்திய பவுலிங் யூனிட்டே சிதறியது போல தெரிகிறது. பும்ராவை ரீப்ளேஸ் செய்வது அவ்வளவு சுலபமல்ல. இருந்தாலும் வல்லவனுக்கு வல்லவன் இருக்க தான் செய்வான் என்பதையும் பும்ரா புரிந்து கொண்டு சீக்கிரம் நல்ல உடற் தகுதியுடன் அணிக்கு திரும்ப வேண்டும் “