தொடர்ந்து சொதப்பும் கே எல் ராகுல், டி20 உலககோப்பை அணியில் இடம் பிடிப்பாரா?
K L Rahul Continuous Falter
காயத்தில் இருந்து மீண்டு வந்து தொடர்ந்து கே எல் ராகுல் ஒவ்வொரு போட்டியிலும் சொதப்பி கொண்டு இருப்பதால் அவரின் உலககோப்பைக்கான இடம் கேள்வி குறியாகி இருக்கிறது.
ஆசிய கோப்பையின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 0(1) ரன்கள், நேற்று எளிதான அணியாக கருதப்படும் ஹாங்காங்குடன் 36(39) என்று பாலுக்கு ஏத்த ரன்கள் கூட கே எல் ராகுல் அடிக்க முடியாமல் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதனால் அவருடைய உலகோப்பைக்கான இடம் கேள்விகுறியாகி இருக்கிறது.
“ அடுத்த போட்டியில் கே எல் ராகுல் இடத்தில் தீபக் ஹூடாவை இறக்கி டெஸ்ட் செய்து பார்க்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது “