ஐபிஎல் போட்டியின் போது காயம், கேன் வில்லியம்சன் உலக கோப்பை விளையாடுவது கேள்விக்குறி!
Kane Williamson Likely To Miss ODI World Cup Idamporul
ஐபிஎல் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் உலககோப்பை விளையாடுவது கேள்விக்குறியாகி இருக்கிறது.
ஐபிஎல் போட்டிகளில் குஜராத் அணிக்காக விளையாடி வந்த கேன் வில்லியம்சன் முதல் போட்டியிலேயே காயமுற்று வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஏற்பட்ட காயத்தின் நிலையை ஆராய்ந்த போது அவர் ஒருநாள் உலககோப்பை போட்டிகள் விளையாடுவதும் கேள்விக்குறியாகி இருக்கிறது.
“ நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரராக கருதப்படும் கேன் வில்லியம்சனுக்கு உலககோப்பையில் மாற்று கண்டுபிடிப்பது என்பது நியூசிலாந்து கிரிக்கெட் போர்டுக்கு நிச்சயம் சவாலான வேலையாக தான் இருக்கும் “