நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விலகினார் கேன் வில்லியம்சன்!
Kane Williamson Step Down From Test Captaincy
நியூசிலாந்து அணிக்கான டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விலகி இருக்கிறார் கேன் வில்லியம்சன்.
தொடர்ந்து மோசமான பார்மில் இருந்து வரும் கேன் வில்லியம்சன், நியூசிலாந்து அணிக்கான டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து அவராகவே விலகி இருக்கிறார். அணியின் புதிய கேப்டனாக டிம் சவுத்தி செயல்படுவார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
“ வெகுவிரைவில் லிமிட்டடு ஓவர் பார்மட்களில் இருந்தும் தனது கேப்டன்சியை கேன் வில்லியம்சன் விடுவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. தொடர்ந்து தன்னுடைய விளையாட்டில் கவனம் செலுத்த இருப்பதால் இந்த முடிவை அவர் எடுத்து இருக்கிறாராம் “