ஐபிஎல் 2021 பஞ்சாப் வெர்சஸ் ராஜஸ்தான் | ஆம் இது தான் உண்மையான திரில்லர் மேட்ச்!
Kartik Tyagi The Man Behind Rajasthan Win
திரில்லர் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்து விட்டு சென்றிருக்கிறது இன்று நடைபெற்று முடிந்திருக்கும் பஞ்சாப் வெர்சஸ் ராஜஸ்தான் மேட்ச்.
ராஜஸ்தான் வைத்த 185 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப்பின் அதிரடியைப் பார்த்து, பஞ்சாப் அணி எளிதாக இப்போட்டியில் வென்று விடும் என்று நினைத்திருந்த நமக்கு, கடைசி ஓவரில் தான் கார்த்திக் தியாகி ஒரு ட்விஸ்ட் வைத்தார். வீசிய ஆறு பந்துகளில் 5 துல்லிய யார்க்கர்கள். அந்த ஓவரில் வெறும் நான்கு ரன்கள் தான் தேவைப்பட்ட நிலையிலும் கூட, கார்த்திக் தியாகியின் அதிரடி பந்து வீச்சினால் அதையும் கூட எடுக்க முடியாமல் ராஜஸ்தானிடம் வீழ்ந்தனர் பஞ்சாப் அணியின் பவர் ஹிட்டர்கள்.
ஒரே போட்டியில் யார் இந்த பவுலர் என்று தேசமே கேட்கும் அளவிற்கு வியக்க வைத்திருக்கிறார் கார்த்திக் தியாகி. வெறும் 20 வயதே ஆன உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், பவர் ஹிட்டர்களுக்கு மத்தியில் ஐந்து யார்க்களை கச்சிதமாக வீசி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது என்பது நிச்சயம் பாராட்டிற்குரியது.
“ வாரியம் உங்களை உற்று நோக்குகிறது தியாகி, இந்த முறை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றுள்ளீர்கள், இதை தொடருங்கள் நிச்சயம் நாளை இந்திய அணிக்கான இடத்தில் நீங்களும் இருப்பீர்கள், வாழ்த்துக்கள் இளம் சிங்கமே “
About Author
Auto Amazon Links: No products found.