ஐபிஎல் 2021 | டெல்லியை வென்றது கொல்கத்தா அணி!
KKR Win Against DC 41th Match Of IPL 2021
ஐபிஎல் 2021-இன் 41 ஆவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வென்றிருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
முதலில் பேட் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெறும் 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி சார்பில் ஸ்மித் 39(34), ரிஷப் பேன்ட் 39(36) ரன்களும் எடுத்தனர். அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணியினர் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தாலும் கூட, 18.2 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
கொல்கத்தாவின் மிகப்பெரிய தூண்களாக இருப்பது அந்த அணியின் இரண்டு ஸ்பின்னர்ஸ் தான். ஒன்று வருண் சக்கரவர்த்தி இன்னொன்று சுனில் நரைன், இருவரும் கொல்கத்தாவிற்கு எக்கனாமிக்கலாக பவுலிங் போடுவது மட்டுமில்லாமல் விக்கெட்டுக்களையும் எடுத்துக் கொடுக்கின்றனர். இது கொல்கத்தாவிற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.
“ புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு பெரும் போட்டி நிலவி வருகிறது. தற்போது இந்த வெற்றியின் மூலம் நான்காவது இடத்தை தற்போதைக்கு தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது கொல்கத்தா. ஆனால் இந்த இடத்திற்கு பெரிய போட்டி நிலவி வருவதால் எந்த அணி அந்த நான்காவது இடத்திற்கு வரும் என்பது கணிக்க முடியாததாகவே இருக்கிறது “